அழகு கிறீமை பயன்படுத்த வேண்டாம் என்று டுபாயில் எச்சரிக்கை

பைஸா( Faiza) அழகு கிறீம்களை பயன்படுத்தவேண்டாம் என்று டுபாய் நகரசபை பொது மக்களிடம் கோரியுள்ளது.

மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயானப்பொருட்கள் குறித்த கிறீமில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நகரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அழகு கிறீம் உற்பத்தியாளர் மற்றும் கிறீம் தொடர்பில் நகரசபை தரவுகளில் எவ்வித பதிவுகளும் காணப்படவில்லை என்றும் அக்கிறீமில் ஹைட்ரோக்கியுனின் எனப்படும் மருந்துகளில் காணப்படும் இரசாயனப்பொருள் பாதரசத்துடன் கலந்து காணப்படுவதாகவும் டுபாய் நகரசபையின் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவு அதன் இண்ஸ்ட்டர்க்கிராமில் செய்தி வௌியிட்டுள்ளது.

குறித்த வர்த்தக நாமமுடைய அழகு பொருட்கள் சந்தையில் காணப்பட்டாலோ, துண்டு பிரசுரங்கள் மற்றும் வேறு வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டாலோ 800900 என்ற இலக்கத்துக்கு உனடியாக அறியதருமாறும் துபாய் நகரசபை கோரியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435