இலங்கை தொழிலாளர்களுக்கு தென் கொரியாவில் இலவச வைத்திய முகாம்

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான இலவச வைத்திய முகாமொன்று எதிர்வரும் 25ஆம் திகதி கிமே வங்கி வளாகத்தினுல் நடைபெறவுள்ளது.

காலை பத்து மணி தொடக்கம் மாலை நான்கு மணிவரை நடைபெறவுள்ள வைத்திய முகாமில் விஸா அனுமதியுள்ள மற்றும் இல்லாத அனைவரும் தமக்கான மருத்துவ தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும்.

இம்முகாமில் விஸா இல்லாமல் வைத்திய சேவையை நாடி வருவோரின் அடையாளம் குறித்த பிரச்சினை ஏற்படாது என்று சுட்டிக்காட்டியுள்ள ஏற்பாட்டாளர்கள் எவ்வித அச்சமுமின்றி தமது வைத்திய தேவையை இம்முகாமில் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்முகாமில் கொமர்ஷல் வங்கியில் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கணக்கை ஆரம்பிக்க விரும்புவோர் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுடன் வருகை தருமாறும் புதிய கணக்கை ஆரம்பிப்போருக்கு பரிசில்கள் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435