கொரியாவில் தொழில்சாலையொன்றில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கியிருந்த நூலினை அகற்ற முயன்ற வேலை தவறி மற்றுமொரு இயந்திரத்தினுல் விழுந்து சம்பவ இடத்திலேயே இந்நபர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு கொரியாவிற்கு வேலைவாய்ப்பை நாடி சென்ற கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த சாம் சௌமிய பாலித்த என்ற 35 வயரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது.
இவர் சட்டவிரோதமாக கொரியாவில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார் என்று பணியகம் தெரிவித்துள்ளது.