சட்டவிரோதமாக தங்கியிருந்த 148,000 பேரை நாடு கடத்தியது குவைத்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 148,000 பேரை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அவ்வாறு வௌியேற்றப்பட்டவர்களில் ஐந்தாயிரம் பேர் இலங்கையர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 88,000 பேர் ஆண்கள் என்றும் 60,000 பேர் பெண்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவைத் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வௌியிடப்பட்ட தகவல்களுக்கமைய, அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் இந்தியர்கள் என்றும் அவர்களின் எண்ணிக்கை 29,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எகிப்து நாட்டைச் சேர்ந்த 16,000 பேரும் பங்களாதேஷை சேர்ந்த14,000 பேரும் நேபாளத்தைச் சேர்ந்த 5,000 பேரும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 4000 பேரும் பிலிப்பைனைச் சேர்ந்த1700 பேரும் நாடு கடத்தப்படும் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435