சுகாதாரத்துறை வேலைவாய்ப்புகள் உங்களை அழைக்கிறது!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுகாதாரதுறைசார் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

த இன்டஸ்ட்ரி டெலன்ட் அறிக்கைக்கமைய கடந்த ஜூலை மாதம் தொடக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறைசார் தொழில்வாய்ப்புகள் அதிகரிகத்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை சார் வேலைவாய்ப்புக்கள் அதிகம் காணப்படும் நாடுகளில் முதலிடத்தில் கட்டாரும் இரண்டாம் இடத்தில் ஐக்கிய அரபு இராச்சியமும் காணப்படுகிறது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சுகாதாரத்துறை சார் வேலைவாய்ப்புகள் 6 வீதத்தால் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பாக விசேட வைத்திய நிபுணர்கள், சுகாதார காப்புறுதி நிபுணர்கள், மருந்து வழங்குனர்கள் போன்ற துறைகளிலேயே அதிக வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வேலைவாய்ப்புகள் தொடர்பில் தென் ஐரோப்பா, மத்தி கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 3000 இளம் பட்டதாரிகள் குறித்த சுகாதாரத்துறை வேலைவாய்ப்புகள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம். கலீஜ் டைம்ஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435