சுதந்திர தினத்தில் மலையகத்தில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலா, கெம்பியன் நகரில் இன்று (04) கறுப்புகொடிகளைப் பறக்கவிட்டு, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

நாட்டில் ஏனைய சமூகங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. எனினும், தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைக்கூட பெறுவதற்கு சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் அடக்கி – ஒடுக்கி ஆளப்படுகின்றனர்.

இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே தேசிய தினத்தில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கறுப்பு பட்டிகளை அணிந்து கோசங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அத்துடன், முச்சக்கரவண்டிகளில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடி கழட்டப்பட்டு கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டன.

நியாயமான சம்பளத்தை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும்,

காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435