தொழில் அனுமதிக் கட்டணத்தை உயர்த்த ஓமான் திட்டம்

தனியார் துறை தொழில் அனுமதிக்கான கட்டணத்தை உயர்த்த எதிர்பார்த்துள்ளதாக ஓமான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எண்ணெய் விலை வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்து திரைச்சேரிக்கான நிதியை அதிகரிக்கும் நோக்கிலேயே வேலை அனுமதிக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் 2017 ஆரம்பம் தொடக்கம் இக்கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.

அந்நாட்டு பொருளியல் நிபுணர்களின் கருத்துக்கமைய, ஓமான் சனத்தொகையில் 45.5 வீதமானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். கடந்த வருடங்களில் தொழில் நாடி ஓமான் வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஓமான் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 38.9 வீதமும் 2010 ஆம் ஆண்டு 29 வீதமும் வெளிநாட்டவராவர். ஓமானில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,747,000 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய தொகை மதிப்பீடு மற்றும் தகவல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

புதிய கட்டண உயர்வானது ஓமானியர்களுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஓமானில் சுமார் 210,000 பேர் முகாமைத்துவ பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 4.8 வீதத்தினரே அந்நாட்டு பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435