
குவைட்டில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 வருடங்களுக்கான சம்பளப் பணத்தை குறித்த பெண்ணின் தொழில் தருநர் வழங்க மறுத்துள்ளதாக குவைட் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
11 வருடங்களுக்கு முன்னர் ஒப்பந்த அடிப்படையில் குறித்தப் பெண் குவைட்டுக்கு சென்று பணிபெண்ணாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் அவரது ஒப்பந்த சம்பளத்தில் 10 சதவீதத்தை மாத்திரமே வழங்கியதாகவும், எஞ்சிய 90 சதவீத சம்பளப் பணத்தை சேமிப்பில் வைப்பதாக தொழில்தருநர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் நாடு திரும்ப தீர்மானத்து தமது எஞ்சிய சம்பளப் பணத்தை கோரிய போது, தொழில்தருநர் பணத்தை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் முறையிடப்பட்டுள்ளதாக குவைட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.