புதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன: பெருந்தோட்டத்துறைக்கு ரமேஸ் பத்திரண

புதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன பதவியேற்றுள்ளார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சராக ரமேஸ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ள்ர்.

காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்ந நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நிதி, பொருளாதாரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர்.

நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்.

ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர்.

தினேஸ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறண் அபிவிருத்தி, தொழில் துறை, தொழில் உறவுகள் அமைச்சர்.

டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்.

பவித்திரா வன்னியாராச்சி – மகளீர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்.

பந்துல குணவர்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்.

ஜனக்க பண்டார தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்.

சமல் ராஜபக்ஸ – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அ​மைச்சர்.

டலஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ – வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.

விமல் வீரவங்ச – சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்.

மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்.

எஸ்.எம்.சந்திரசேன -சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்.

ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்.

பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435