மலேசிய பெருந்தோட்டத்துறையில் பணியாற்ற இலங்கையருக்கு வாய்ப்பு

மலேசிய பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்கு பல்திறமை வாய்ந்த தொழிலாளர்கள் தேவையாக உள்ளனர். எனவே இலங்கையில் இருந்து தொழிலாளர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதகா அந்நாட்டு பிரதி உள்விவகார அமைச்சர் டொக்டர் அஹமட் ஷாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

இருநாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரதியமைச்சர் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோருடன் நேற்றுமுன்தினம் (21) இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  மலேசியாவின் சிம் டார்பி குழும பெருந்தோட்டத் துறையில் பணியாற்றுவதற்கு சுமார் 5000 பணியாளர்கள் தேவையென அரசாங்கம் அடையாளங்கண்டுள்ளது. அத்தொழிலாளர்களை இலங்கையில் இருந்து பெற்றுகொள்ள நாம் எண்ணியுள்ளோம். அனுமதிக்கப்பட்டால் இருநாடுகளும் இவ்விடயம் தொடர்பான சட்ட நடைமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.

 மலேசியாவில் தற்போது சுமார் 6500 இலங்கையர் உற்பத்தி மற்றும் வீட்டுப்பணிகள் என்பவற்றில் பணியாற்றுகின்றனர் என்றும் இதன் போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435