மேல்மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விரைவில் 600 ஆசிரியர்கள்

மேல் மாகாணத்திலுள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்காக புதிதாக 600 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ஸ தெரிவித்துள்ளார்.

தொடங்கொட கொடஹேன தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளை மேல்மாகாண கல்வித்திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

நேர்முகப்பரீட்சைகள் மூலமாக தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ஸ தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435