நாட்டின் தாதியர் சேவை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கம் கூறியுள்ளது.
தற்போது தாதியர் சேவையில் பெருளவு தாதியர் பற்றாக்குறை உள்ளதுடன், சேவையின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க கூறியுள்ளார்.
தாதியர் சேவையின் தொழில் உரிமை ஊடாக அந்த சேவையின் தரத்தை மேலும் விருத்தி செய்வதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று காமினி குமாரசிங்க கூறினார்.
தேசிய தாதியர் தினத்தை முன்னிட்டு இன்று இது தொடர்பில் அதிகாரிகளை தௌிவூட்டுவதற்கு தேசிய வைத்தியசாலைகளில் பல வேலைத்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க கூறியுள்ளார்.
அத தெரண