கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான புதிய கட்டணத்தை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளது.
அதற்கமைய, சாதாரணசேவைக்கான கட்டணம் 3500 ரூபாவாகவும் ஒரு நாள் சேவைக்கான கட்டணம் 15,000 ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளது.
தற்போது கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு சாதாரண சேவைக்கான கட்டணம் 3000 ரூபாவும் ஒரு நாளைக்கான கட்டணம் 10,000 ரூபாவும் ஆகும்.
புதிய கட்டணம் நாளை (01) முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது