ஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேறுகள் எப்போது வௌியாகும்

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சை பெறுபேறுகள் பல மாதங்களாக வௌிவராத நிலையில் பட்டதாரிகளும் மாணவர்களும் பெரும் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று ஆசிரியர் சேவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சையில் சுமார் 7000 பேர் தோற்றினர். எனினும் இதுவரை பெறுபேறுகள் வௌியாகவில்லை. இதனால் பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினை மட்டுமன்றி சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கும் தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை. இது பெரும் அநீதியான செயலாகும்.

குறித்த விடயத்தை கவனத்திற்கொண்டு குறித்த பெறுபேறுகளை உடனடியாக வௌியிடுவதுடன் தகுதியானவர்களை நேர்முகத்தேர்வினூடாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என மிகவும் பொறுப்புடன் கேட்டுக்கொள்வதாக அச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் சுமார் 80 பாடசாலைகளில் 500 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் மிக நீண்டகாலமாக காணப்படுகிறது. குறிப்பாக ஆரம்ப வகுப்புகளிலேயே இவ்வாறு ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435