நிரந்தர நியமனம் வழங்குவது அரசின் நோக்கங்களில் ஒன்று – பிரதமர்

எமது தற்போதைய அரசாங்கத்தின் நோக்குகளில் அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதும் ஒன்றாகும் என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5,500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் அலரிமாளிகையில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

சமூக வலுவூட்டலுக்கு முன்னுரிமை வழங்கியமையே கடந்த 20 வருடங்களாக வழங்கப்பட தவறியிருந்த சமுர்த்தி உதவித் தொகை மற்றும் சமுர்தி அதிகாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கு வழிகோலியது.

இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கான ஓய்வூதியத்திற்கான அங்கீகார கடிதமும் கையளிக்கப்பட்டது.

நீண்டகாலம் சேவையில் இருந்தும் நிரந்தர நியமனம் பெறாதவர்களே இன்று நிரந்தர நியமனத்தை பெறுகின்றனர். அதற்கான பணியை அமைச்சர் தயா கமகே ஆரம்பித்துள்ளார். இனி அரச ஊழியராக உங்கள் பணியை முன்னெடுக்க முடியும் என்று நாம் நம்புகிறோம். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நீண்டகாலமாக நிரந்தர நியமனம் பெறாது ஏச்சுப்பேச்சுக்களை வாங்கிக்கொண்டிருந்தனர். இனி நீங்கள் போராட்டங்களை நடத்த வேண்டியதில்லை. அரச ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குவது அரசாங்கத்தின் கடமை என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435