சுகாதார பணியாளர்களின் ஆபத்து நிலை குறித்து முன்னெச்சரிக்கை

சுகாதார அமைச்சினால் 12.04.2020 அன்று வெளியிடப்பட்ட 02/03/2020 என்ற சுற்றறிக்கை மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் 25.04.2020 வெளியிடப்பட்ட 73ஆம் இலக்க பணிப்புரைககமைய அத்தியாவசிய மற்றும் ஆகக்குறைந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக ஆபத்தான முறையில் தாதியர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசு தாதிய உத்தியோகத்தர் சங்கம், சுகாதார செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றை கோரி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது

குறித்த பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளுக்கு தாதிய அதிகாரிகள் உள்ளிட்ட பணி குழுவினரை தனிமைப்படுத்தல்  நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினால் அது பாரிய ஆபத்தான நிலைக்கு உரியது என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435