மொழித் தேர்ச்சி தேர்வுக்கு பதிலாக பாடத்திட்டம்

அரச கரும மொழி தேர்ச்சியினை பூர்த்தி செய்து கொள்வற்காக எழுத்து மற்றும் வாய்வழி சோதனைகளுக்கு பதிலாக குறிப்பிட்ட மணிநேர பாடத்திட்டத்தை நிறைவு செய்து குறித்த தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக புதிய விதிமுறைகளை தயாரித்து கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச கரும மொழி தேர்ச்சியை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக தற்போது காணப்படும் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற் கொண்டு குறித்த புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதனுடன் தொடர்புடைய யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தடங்கல்கள் நீங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435