UAE இல் இப்படியொரு தவறிழைத்தால் 5000 த்ராம் அபராதம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியும் ஆசிய நாட்டு பணியாளர் ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றத்தினால் 5,000 த்ராம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொவரை புகைப்படம் எடுக்க முயற்சித்தமையினாலே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் அனுமதியின்றி அவரை புகைப்படம் எடுக்க முயற்சித்தமையினால் சார்ஜா நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தாம் பயணித்த காரிலிருந்;து இறங்கியபோது, ஆசிய நாட்டுப் பிரஜை அவரை புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, அனுமதியின்றி புகைப்படம் எடுத்தமையினால் குறித்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து, சந்தேகத்திற்குரியர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வேலைத்தளம்

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435