விபத்துக்களும் தொழிலாளர்களும்!

தொழிலாளர்கள் இன்றி எதுவும் சாத்தியமில்லை. எவ்வளவுதான் இயந்திரங்கள் வந்தபோதிலும் மனித உழைப்பின்றி எதுவுமே சாத்தியமில்லை. இலகுவான வேலைகள், கஷ்டமான வேலைகள், ஆபத்தான வேலைகள் என எதுவாக இருந்தாலும் தொழிலாளர்கள் எதனையும் விட்டு வைப்பதில்லை. அவர்களுக்கான கடமைகளை அவர்கள் செய்துகொண்டுதான் இருப்பார்கள். வௌிநாடுகளாயிருந்தாலும் சரி, உள்நாட்டிலாயிருந்தாலும் சரி, பணியின் போது உயிரிழக்கும் தொழிலாளர்களும் உள்ளனர். சில சமயங்களில் தொழிலாளர்கள் பணியின் போது விபத்துக்குள்ளாகின்றனர். விபத்து என்றால் என்ன? அதனை எவ்வாறு அடையாளங் காண்பது? எவ்வாறு தவிர்ப்பது? அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விபத்து

பத்து என்பது திட்டமிடாத எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்ச்சி. அவ்விபத்தின் விளைவால் காயம் ஏற்படலாம். அல்லது ஏற்படாமலும் போகலாம்.

ஒரு விபத்தின் விளைவால் பெருத்த காயமோ அல்லது சிறிய காயமோ ஏற்படலாம். ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு மூலம் 100க்கு 98 விபத்துக்களுக்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகள் இரண்டாக அமையும். ஒன்று பாதுகாப்பற்ற நிலைகள் மற்றொன்று பாதுகாப்பற்ற செயல்கள்.

இதன் மூலம் நாம் அறிவது “விபத்துக்கள் தானாக நிகழ்வதில்லை. அவைகள் உண்டாக்கப்படுகின்றன” என்பது நன்கு புலனாகிறது.

அபாயங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்

ஒரு சிறு காயமோ அல்லது பெரிய காயமோ ஏற்படுவதற்கு காரணம் ஒரு விபத்து. அந்த விபத்து ஏற்படுவதற்குக் காரணம் பாதுகாப்பற்ற செயல் மற்றும் பாதுகாப்பற்ற நிலை. மனிதர்களின் தவறுகளினால் தான் பாதுகாப்பற்ற செயல் மற்றும் பாதுகாப்பற்ற நிலைகள் ஏற்படுகின்றன.

மனிதனுடைய தவறுகளுக்கு காரணங்கள் இரண்டாக அமையலாம். ஒன்று அவன் இருக்கும் சமூக சூழ்நிலை. மற்றொன்று அவன் வந்த முன்னோர்கள் வழி.

இடையூறுகள்

விபத்துக்கள் உற்பத்திக்கு இடையூறுகள் பலவிதம். உதாரணமாக குறித்த நேரத்தில் மசகெண்ணெய் வந்து சேராமை, இயந்திரங்கள் பழுதடைதல், போதிய அளவு மனித நேரமின்மை, மின்சாரமின்மை போன்றவையாகும்.

ஒரு மருத்துவர் ஒருவருடைய உயிரைக் காப்பாற்ற முடியுமென எளிதில் நம்புகிறோம். ஆனால் விபத்துக்கு பலியாகும் முன்னரே ஓருவரை காப்பாளர் காப்பாற்ற முடியுமென நம்பத் தயங்குகிறோம்.

நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் வேலையிலும் ஒரு சில பாதுகாப்பற்ற நிலை கலந்திருப்பதால், விபத்துக்கள் கட்டுப்படுத்த முடியாதவை என்றும் கூறுகிறோம். ஆனால் முறையான பாதுகாப்பின் மூலம் விபத்தினைக் கட்டுப்படுத்தலாம்.

எந்த ஒரு விபத்து நிகழ்ந்தாலும் முதலில் மேலே குறிப்பிட்ட மற்றும் பாதுகாப்பற்ற செயல் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலை இவைகளில் எது என்று கண்டு, அதனை அகற்ற முயல வேண்டும்.

தொழிற்சாலைகளில் விபத்துக்கான பாதுகாப்பற்ற சூழ்நிலைகளாகக் கருதப்படுவன சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • இயந்திரங்கள், கருவிகள், ட்ரொலிகள் போன்ற பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்காமல் ஒழுங்கற்ற நிலையில் வைத்தல்.
  • இயந்திரங்கள் மற்றும் சில சாதனங்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் பொருத்தாமல் இருத்தல்.
  • பாதுகாப்பு மறைப்புகள் இல்லாமை.
  • திட்டமிடாத அமைப்புகள், வழுக்கும் தரைகள்.
  • உறுதியற்ற, ஒழுங்கற்ற படிக்கட்டு அமைப்புகள்.
  • சரியான கையாளும் முறைகள் இல்லாத நிலை.
  • பாதுகாப்பற்ற ஒளி அமைப்பு அல்லது வசதிக்குறைவான வெளிச்சம், தாங்க முடியாத இரைச்சல்.
  • இயந்திரங்களின் கூர்மையான பகுதி அல்லது உடைந்த நிலை.
  • குறுகிய திருப்பங்கள்.
  • பாதுகாப்பற்ற செயல்கள்
  • இயந்திரங்களை தகுந்த பயிற்சி அனுமதி இல்லாமல் இயக்குவது.
  • இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்களை குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாக ஓட்டுவது, பொருட்களை தவறான முறையில் கையாளுதல்.
  • கவனமில்லாமல்
  •  வேலை செய்வது.
  • பாதுகாப்பற்ற கருவிகளைப் பயன்படுத்துதல்
  • தடுமாற்றமான நிலையில் நின்று வேலை செய்தல்.
  • நிதானமற்ற மனநிலையில் வேலை செய்தல்.
  • இயந்திரங்களில் உள்ள பாதகாப்பு கவசங்களை அகற்றிவிட்டு வேலை செய்தல்.
    வேலைக்குத் தகுந்த கருவிகளை உபயோகப்படுத்தாதிருத்தல்.
  • ஆபத்தான வேலைகளில் அருகில் இருப்பவரை எச்சரிக்கை செய்யாமல் வேலை செய்தல்.

விபத்து தடுப்பு முறைகள்

தொழிற்சாலைகளில் விபத்துக்களைப் பல்வேறு வழிகளில் தவிர்க்கலாம். அவற்றுள் இன்றியமையாத வழிமுறைகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.

  • முறையான தொழிற்கூடங்களையும், இயந்திரங்களையும் அமைத்தல்.
  • முறையான செயல்முறைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்துதல்.
  • தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் முறையாக பராமரித்தல்.
  • தொழிற்சாலைகள் – இயந்திரங்கள்
  • தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் வடிவமைக்கும் காலத்திலேயே தேவையான பாதுகாப்பு கவசங்களையும் அமைப்புகளையும் அவற்றுள் ஒருங்கிணைக்க வேண்டும்.

முறையாக பராமரித்தல்

தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் முறையாக பராமரித்து அவைகளின் பணிகளைத் தவறில்லாது செய்யும் வகையில் காத்திடுதல் அவசியம்.

செயல்முறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்

வேலை செய்யும் இயந்திரங்களுக்குப் போதுமான செயல்முறைகளை ஏற்படுத்தவேண்டும். பல்வேறு வகையான வேலைகளைச் செய்யும் போது ஏற்படக்கூடிய பாதுகாப்பு இடர்களைக் கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்துதல் வேண்டும்.

செயல்முறைகள் / வழிமுறைகளை அமுல்படுத்துதல்

பாதுகாப்பு வழிமுறைகளையும் வேலையில் முறையான செயல் முறைகளையும் அனைவருக்கும் கற்பித்து அனைவரும் அதை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

தகுந்த அறிவிப்புகள்

வேலையில் உள்ள அபாயம், இடர்பாடுகள், பணிபுரியும் போது கையாள வேண்டிய பொருட்களின் தன்மைகள், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்கள் முதலியவற்றை உரிய தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டும்.

உத்தரவுகள்

வேலையின் தன்மையையும் வேலை செய்வோரின் தன்மையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, வேலை நேரங்களில் சரியான உத்தரவுகளை அளித்தல் வேண்டும்.

பயிற்சி

  • செய்யும் பணியிலும் அதைச் சார்ந்த பாதுகாப்பு முறைகளிலும் தொழிலாளர்கள் தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பாகப் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • நைட்ரஜன் அல்லது அழுத்தமான காற்றுக்கு பதிலாகவோ ஒருபோதும் ஆக்ஸிஜனை உபயோக்கிக்கூடாது.
  • வாயு உருளையின் நிறுத்தத்தையோ அல்லது அதன் மீதுள்ள அடையாளங்களையோ அல்லது வால்வு இணைக்கும் பகுதியிலுள்ள மறைகளையோ மாற்ற ஒரு போதும் முயற்சிக்கக்கூடாது.
  • வாயு உருளையின் வால்வுகளிலோ அல்லது வேறு எந்தப் பகுதிகளிலோ எண்ணெய், கீரிஸ் அல்லது எந்தவித பிசுபிசுப்பான பொருட்களையும் ஒருபோதும் உபயோகிக்கக்கூடாது.
  • வால்வுகளை எப்போதும் அழுக்கில்லாமல் சுத்தமாகவும், காய்ந்த நிலையிலும் வைத்திருக்கவும்.
  • அதிக அழுத்தமுள்ள ஆக்ஸிஜன் வாயுவுடன் எண்ணெய் அல்லது கீரிஸ் சேரும்பொழுது வெடிக்கக்கூடிய கலவையாக மாறி, வாயு உருளை பயங்கரமாக வெடிக்கும் அபாயமுள்ளது.
    வால்வை முழுமையாக பாதுகாக்கும் பொருட்டு, வாயு உருளைகளை உபயோகத்தில் இல்லாமலிருக்கும் பொழுது வால்வு மூடிகாளல் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். உருளையில் வாயு இருக்கும் போதும் வால்வானது முறிந்து உடைந்து விட்டால் அது மிகவும் அபாயகரமானது.
    வாயு உருளைகள் பற்றவைக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஐந்த மீட்டர் தூரமாவது தள்ளி இருக்க வேண்டும்.
  • உருளைகளின் வால்வையோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களையோ ஒரு போதும் பழுது பார்க்க முயலக்கூடாது.
  • உருளைகளை, பொருட்களை நகர்த்தும் உருளைகளாகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது.
  • மின்சார ஓட்டம் இருக்கும் இடங்களில் உருளையின் வழியாக மின் ஓட்டம் செல்லுமாறு உருளைகளை வைக்கக்கூடாது.
  • உருளைகளை தள்ளவோ, உருட்டவோ கூடாது. அவைகளை கொண்டு செல்ல தகுந்த வண்டிகளை உபயோகிக்க வேண்டும்.
  • சிலிண்டர்களை கையாளுவதில் சந்தேகமிருந்தால் வாயு சேவைப் பிரிவினரை அணுகவும்.

தனிமனித பாதுகாப்பு சாதனங்கள்

பாதுகாப்பு என்பது மனிதன் தோன்றிய காலம் முதலே பழக்கத்தில் இருந்து வரும் ஒரு செயல். ஆகவே தான் கற்கால மனிதன் கூட தன்னை மிருகங்களிடமிருந்து காத்துக்கொள்ள கற்களால் ஆன கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தினான். இறைவன் படைப்பில் கூட மனித உடம்பில் பல அம்சங்கள் இயற்கை பாதுகாப்புடனே அமைந்துள்ளன. கண், மூக்கு, போன்ற உடலின் பாகங்கள் கூட பாதுகாப்பு அமைப்புடனேயே படைக்ககப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையை தனித்து நிற்கும் ஒரு கட்டிடம் போல நினைத்து, அதற்குள் புகுமுன்பு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் தகுந்த பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து முழு பாதுகாப்புடனேயே செல்லுதல் அவசியம்.

ஒரு மனிதனின் மனமும் உடலும் ஆரோக்கியமாக திடகாத்திரமாக இருந்தால்தான் அம்மனிதனின் முழு சக்தியும் வேலையில் வெளிப்படும். நாம் வேலைக்கு சென்று திரும்பும் போது அங்கம் குறையில்லாமல் நல்ல மதிப்பு மிக்க குடிமகனாகத் திரும்ப வேண்டும். அதற்கு நாம் செய்யும் தொழிலில் பாதுகாப்பைக் கடைபிடித்து செவ்வனே வேலையை முடித்து மகிழ்வுடன் வெளியே வரவேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தொழிற்சாலை சட்டத்தில் தொழிற்சாலைப் பாதுகாப்பை குறித்து பல சட்டங்கள் இயற்றப்பட்டு அவைகள் கண்டிப்பாக பின்பற்றபடவேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. அதன்படி ஒரு தொழிற்சாலையில் பாதுகாப்பு சாதனங்கள் அளிக்கப்படவேண்டும். அந்தப் பாதுகாப்பு சாதனங்கள் கீழ்க்கண்டவாறு இருத்தல் வேண்டும்.

எந்த ஒரு தொழிற்சாலையும் அபாயத்தை எதிர்கொள்ள தகுந்த பொருத்தமான பாதுகாப்பு சாதனங்களை தொழிலாளர்களுக்குத் கொடுக்க வேண்டும்.
அந்தப் பாதுகாப்பு சாதனங்கள் அணிவதற்கு எளிதாகவும் எளிதாக சுத்தம் செய்து திரும்பவும் உபயோகப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அந்த பாதுகாப்பு சாதனங்கள் மிகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும்.
இயற்கையான அங்க அசைவுகளை தடை செய்யாதவாறு இருத்தல் அவசியம்.
பல வல்லுநர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டு நல்ல தரமான பொருட்களால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு சாதனங்களின் அவசியம்

தொழிற்சாலையில் எதற்காக பாதுகாப்பு சாதனங்கள் கொடுக்கப்பட வேண்டும்? இரசாயனம் அல்லது கரைசல் அல்லது வேறுபல விதத் தொழிற்சாலைகளிலும் 100 சதவீதம் முற்றிலும் பாதுகாப்பை அளிப்பது என்பது ஒரு அரிதான காரியம். பல சமயங்களிலும் தெரிந்தே ஆபத்தான பொருட்களை ஆபத்து நிறைந்த இடங்களில் மிகவும் ஆபத்தான முறையில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். அது மட்டுமின்றி விபத்து என்பதன் விளக்கமே எப்போதும் எந்த சமயத்திலும் நாம் எதிர்பாராத முறையில் எதிர்பாரா இடத்தில் நிகழும் ஒரு சம்பவம். வருமுன் காக்க வேண்டுமெனில் தற்காப்பு சாதனங்கள் கொடுப்பது அவசியமாகிறது. எதிர்பாரத செயலால் உண்டாகும் மனித நஷ்டத்தை தற்காப்புச் சாதனங்கள் கொடுப்பதன் மூலம் தடுத்தி நிறுத்தி விடலாம். வருமுன் காக்கும் தற்காப்பு சாதனங்கள் விபத்தை முழுமையாக தடுத்து நிறுத்துவதில்லை. ஆனால் மனிதனின் துயரங்களை வேதனைகளை தடுத்து நிறுத்துகிறது. இந்த பாதுகாப்பு சாதனங்கள் மனிதனுக்கும் விபத்திற்கும் நடுவே அமையப் பெற்ற ஒரு அரண் என்பது தான் உண்மை.

பாதுகாப்பு சாதனங்களின் வகைகள்

பாதுகாப்பு சாதனங்கள் இருவகைப்படும்.

  1. சுவாசப் பாதுகாப்பு சாதனங்கள்
  2. சுவாத்தை அல்லது மற்றபாதுகாப்பு
  3. பாதுகாப்பு சாதனங்களுக்கான தேர்வுகள்

பாதுகாப்பு சாதனங்கள் தேர்தெடுக்கும் முன்பு கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தெடுக்க வேண்டும்.

  • செய்யப்போகும் பணி
  • அந்தப் பணியில் உள்ள அபாயம்
  • பணி செய்யும் இடம்
  • பணி செய்யுமிடத்தின் சுற்றுப்புறம்.
  • அது மட்டுமின்றி எந்த உறுப்பை பாதுகாக்க வேண்டும். எந்த இயந்திரத்தில் பணி செய்யும் போது எந்த இரசாயணப் பொருட்கள் அருகில் பணி செய்ய வேண்டும். இவற்றை யெல்லாம் தீர்மானித்த பிறகு அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமான பாதுகாப்பு சாதனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

சுவாசப் பாதுகாப்பு சாதனங்கள், சுவாசக்கேடு விளையும் சூழ்நிலைகள்

வெளிக்காற்று எப்போதும் சுத்தமானதாக இருப்பதில்லை. தொழிற்சாலைக்கு அருகில் காற்று சுத்தமானதாக இருப்பதில்லை. அதன் சுத்தத்தினை புழுதி, புகை, ஆவி, துகள், வாயு முதலிய பொருட்களால் அசுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளில் இவ்வித அசுத்தங்கள் உண்டாகாமல் தடுக்க வழிமுறைகள் உண்டெனில் அவைகள் பின்பற்றப்பட வேண்டும். அது முடியவில்லையெனில் நல்ல சுத்தமான காற்றோட்டம் கிடைக்க அதிக அளவு ஜன்னல்கள் அமைத்து காற்றோட்டத்தை அதிகரித்து நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களின் வீரியத்தைக் குறைக்கவோ அல்லது அவைகளை காற்றுடன் வெளியே அடித்துக்கொண்டு செல்லும்படி செய்யலாம். இதுவும் முடியவில்லையென்றால் அம்மாதிரியான அபாயம் நிறைந்த இடங்களில் பணிசெய்யும் போது சுவாசப் பாதுகாப்பு சாதனங்கள் அணிந்து பணிசெய்வது நலம் அம்மாதிரியான இடங்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

(அ) பிராணவாயு குறைவான இடம் நாம் மூச்சுவிடும் காற்றில் 21 சதவீதம் பிராணவாயு இருத்தல் அவசியம். ஆனால் அழுகிய பொருட்கள் துர்நாற்றம் அசுத்தமான வாயு இவைகள் காரணமாக 21சதவீதம் இல்லையெனில் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பிராணவாயு 16 சதவீதத்திற்குக் குறைவாக இருக்குமேயானால் மூச்சுத்திணறல், மயக்கம், கடைசியில் மரணம் ஏற்பட வழியண்டு. இந்த இடங்களில் வேலை செய்யும்போது சுத்தமான காற்று அல்லது பிராணவாயு அளிக்கக் கூடிய தற்காப்பு சாதனங்கள் அணிய வேண்டும்.

(ஆ) நச்சுத்தன்மை கூடிய வாயுவினால் ஏற்படும் அசுத்தம் இவை உயிருக்கு ஊறுவிளைவிக்கும் விஷவாயுவாக இருக்கலாம். உடலுக்கு ஊறுவிளைவிக்கும் அல்லது மயக்கம் தரும் வாயு குறைந்த அளவு இருந்தாலும் விபத்து ஏற்பட வழியண்டு. இந்த இடங்களுக்குச் செல்லும் முன்பு பாதுகாப்பு சாதனங்கள் அணிந்த செல்ல வேண்டும்.

(அ) உடனே மரணத்தை விளைக்கககூடிய விஷவாயு

(ஆ) துகள்கள், (புழுதி, புகை, ஆவி) இவைகள் உடனே உயிருக்கு ஊறு விளைவிப்பவை அல்ல. நச்சுத்தன்மை வாய்ந்த அசுத்தத்துகள்கள் இத்தகைய துகள்கள் சுவாசக் குழல் வழியாக சென்று நுரையீரல் மூலமாக இரத்தத்தைச் சென்று அடைகிறது. ஆகவே உடலின் பல பாகங்களுக்கும் இந்த துகள்கள் செல்கிறது.

நன்றி – இணையம்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435