மதிப்பீட்டினூடாக புள்ளி வழங்கும் முறையின் கீழ் முதற்தடவையாக நடத்தப்பட்ட கொரிய மொழி திறன் பரீட்சையில் இம்முறை 3514பேர் சித்தியடைந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தித்துறையில் 20187 பேரும் மீன்பிடித்துறையில் 3118 பேரும் தோற்றிய மேற்படிப்பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்றோருடைய பெயர் விபரங்கள் கொரிய மனித வள நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்தது.
கொரிய மனித வள நிறுவனம் மற்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து இணைந்து நடத்திய இப்பரீட்சைக்கான அனைத்து மேற்பார்வையும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்டது.
இம்முறை நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்றோரின் பெயர் விபரங்கள், மதிப்பெணகள் மற்றும் திறன் பரீட்சைக்கான தினம் என்பவற்றை www.slbfe.lk இணையதள முகவரியில் பிரவேசித்து பார்வையிடலாம்.
சுமார் 26, 000 இலங்கையர்கள் தென்கொரியாவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்