கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தி புதிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய, விமானசேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
விமான சேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த புதிய பாதுகாப்பு சட்ட நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
அதற்கமைய, விமான பயணி ஒருவர் தனது கைப்பையினுள் கொண்டு வரக்கூடிய திரவங்கள், ஸ்ப்ரே வகை, ஜெல் வகைகள் ஆகிய பொருட்களுகளின் அளவினை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நீர், பான வகைகள், சுப், ஜேம், சோஸ், திரவ வகைகள், க்ரீம், மருந்துகள், எண்ணெய், வாசனை திரவியம், ஸ்ப்ரே, ஜெல் வகைகள், காற்று அழுத்தம் அதிகமாக கொடுக்கும் கொள்கலன்கள், சவரநுரை வகைகள், வேறு நுரை வகைகள், கண் இமைக்கான அழகு சாதன வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள், நீராவி திரவ வகை பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு மேல் அதிகரிக்க கூடாது. அத்துடன் திரவத்திலான கொள்கலன்கள் 20X20 என்ற அளவில் வெளிப்படையாக தெரியும் வகையிலும் மீண்டும் மூடிக்கொள்ள கூடிய பொலித்தீன் பைகளில் மூட வேண்டும். ஒரு பயணியினால் அந்த பை ஒன்று மாத்திரமே கொண்டு செல்ல முடியும்.
இதற்கு மேலதிகமாக கொண்டு செல்லும் திட்டம் இருந்தால் அவற்றினை விமான டிக்கட் ஒப்படைக்கும் இடத்தில் ஒப்படைக்கப்படும் பயண பைகளுடன் எடுத்து செல்ல முடியும்.
இதற்கு மேலதிகமாக மருந்து வகைகள், சிறு பிள்ளைகளின் உணவு வகைகளுக்கு அவசியமான திரவ வகைகள் இருப்பின் அவற்றினை வைத்தியர் ஒருவரிடம் உறுதிபடுத்தப்பட்டதன் பின்னர் மருந்து வகைகளுடன் தம்வசம் வைத்து கொள்ள வேண்டும்.
விமான நிலைய தீர்வை வரியற்ற கடைகளில் கொள்வனவு செய்யும் பொருட்களுகளை அந்த கடைகளிலேயே பொதியிட்டு வழங்கப்படும். குறித்த சட்டத்திட்டங்கள் அந்த பொருட்களுக்கும் உள்ளடக்கப்படுகின்ற நிலையில், அந்த பொருட்களுக்கான ரசீதுகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏற்றுக்கொள்ள வேண்டி விடயங்கள் சமர்ப்பிக்க தவறினால் விமான பயணிகளின் பொருட்கள் விமான நிலையத்திற்குள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.