இணையவழி இலகு கடன் மோசடி: வங்கிக் கணக்குகளின் இரகசிய தகவல்களை பாதுகாக்கவும்
சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழி ஊடாக இலகுவான கடன் திட்டஙகள்;மூலம் நிதி மோசடிகள் இடம்பெறுகின்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, வங்கிக் கணக்கு இலக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை மற்றும் கடவுச்சொல், அட்டைகளின் தனிப்பட்ட அடையாள இலக்கங்கள் அல்லது இணையத்தள வங்கித்தொழில் வசதிகள் என்பன தொடர்பான தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது,
இலங்கை மத்திய வங்கி, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட பிரயோகங்களுடாக பல்வேறு வகையான நிதியியல் மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் தொழிற்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பான தகவல்களைப் பெற்றிருக்கிறது.
அண்மைக் காலமாக இவ்வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய ஏமாற்று நடவடிக்கைகளில் பெரும்பாலானவை பொதுமக்களைக் கவரதத்தக்க இலகுவான கடன் திட்டஙகள்;மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்தகைய மோசடியான கடன் ஒப்புதல் செய்முறைகளின் போது மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு இலக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கம் போன்ற வாடிக்கையாளர்களின் இரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் பொதுமக்களை வசீகரித்துக் கொள்வர்.
அதன் பின்னர் மோசடியாளர்கள் அத்தகைய இரகசியத் தகவல்களை வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுகுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளரின் பணத்தினை திருடிக் கொள்வர்.
இரகசியமான வாடிக்கையாளர் தகவல்கள், சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு இலக்கங்கள் இணையத்தளம் அல்லது செல்லிடத் தொலைபேசி வங்கித்தொழில் அல்லது இ-வலட் கணக்கு பயன்படுத்துநர் பெயர்கள் அடையாள அட்டை மற்றும் கடவுச்சொல், அட்டைகளின் தனிப்பட்ட அடையாள இலக்கங்கள் அல்லது இணையத்தள வங்கித்தொழில் வசதிகள் (தன்னியக்கக் கூற்றுப் பொறிகளிலிருந்து காசினை எடுப்பனவு செய்ய அல்லது அதேநேரக் கணனிவழி வங்கித்தொழில் அணுகலுக்குப் பயன்படுத்தும் இலக்கம்) அதேநேரக் கடவுச்சொல் போன்ற கொடுக்கல்வாங்கல் சரிபார்ப்பு தகவல்கள், கொடுக்கல்வாங்கல் சரிபார்ப்புத் தொகை, அட்டை இலக்கங்கள், அட்டை காலாவதியாகும் திகதி, பாதுகாப்புக் குறியீடுகள், அட்டையின் பின்புறத்தில் பொதுவாகக் காணப்படும் அட்டைச் சரிபார்ப்பு இலக்கங்கள் மற்றும் சி.வி.வி, சி.வி.சி. அல்லது சி.வி.எஸ். எனக் குறிப்பிடப்படுகின்ற இலக்கங்கள் மற்றும் கணக்கு இலக்கங்களை அணுகுவதற்கு அல்லது சரிபார்ப்பதற்குப் பயன்படக்கூடிய வேறு ஏதேனும் தகவல்கள், கொடுப்பனவு அட்டைகள், இலத்திரனியல் வலட்டுக்கள் அல்லது வேறேதேனும் கணக்குகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றன.
பொதுமக்கள் குறுஞ்செய்திப் பணி எச்சரிக்கைகள் போன்ற அதேநேர அறிவித்தல் பணிகளை அவர்களது வங்கிகள், நிதிக் கம்பனிகள் போன்ற வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு நினைவூட்டப்படுகின்றனர். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் அவர்கள், அவர்களது கணக்குகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற ஏதேனும் மோசடி நடவடிக்கைகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.
மத்திய வங்கி, இம்மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கை பற்றி விழிப்பாக இருக்குமாறும் ஏதேனும் இரகசியமான தகவல்களை விசேடமாக கணக்கின் பயன்படுத்துநர் பெயர், கடவுச்சொல், தனிப்பட்ட அடையாள இலக்கம், அதேநேரக் கடவுச்சொல் அல்லது கணக்கினைச் சரிபார்ப்பதற்குத் தேவையான வேறு தகவல்களை மற்றையவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமென பொதுமக்களுக்குப் பலமான ஆலோசனை வழங்குகிறது. அத்தகைய தகவல்களைக் கணக்கினைச் சொந்தமாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாத்திரமே பயன்படுத்துதல் வேண்டும். வாடிக்கையாளர்கள் ஏதேனும் நிதியியல் சாதனங்கள் அல்லது பணிகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக அவை பற்றிய நியதிகள் மற்றும் நிபந்தனைகளை மிகக் கவனமாக வாசித்தல் வேண்டும்.
மேலும், வாடிக்கையாளர் வாடிக்கையாளரின் நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்குகளை அணுகக்கூடிய வாடிக்கையாளர் இரகசியத் தகவல்களை வழங்குகின்ற இலகுக் கடன் திட்டங்களை மூன்றாந்தரப்பினர் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றவிடத்து அல்லது வாடிக்கையாளர் மேற்கொள்ளாத கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஏதேனும் சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திப் பணி அல்லது மின்னஞ்சல் எச்சரிக்கை அல்லது தொலைபேசி அழைப்புக்களைப் பெறுமிடத்து அவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களது தொடர்பான வங்கிக்கு அல்லது அத்தகைய சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளுக்குரிய மற்றைய நிதியியல் நிறுவனங்களுக்கு அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றனர்.
என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.