கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உலகளவில் மொத்த தொழிலாளர்களில் ஐம்பது வீதமானவர்கள் தொழில் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) எச்சரித்துள்ளது.
குறிப்பாக முறைசாரா பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களில் முக்கால்வாசி பேர் அதாவது 1.6 பில்லியன் 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இச்சிக்கலை எதிர்நோக்குவர்.
கோவிட் -19 நெருக்கடி காரணமாக, வேலை நேரத்தில் மேலும் அதிக சரிவு எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள உலக தொழிலாளர் அமைப்பு, குறித்த தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் உடனடியாக அழியும் ஆபத்தை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் வேலை உலகம் குறித்த தனது மூன்றாவது அறிக்கையில், ஏற்கனவே தொழில் உலகில் ஏற்கனவே பாதிக்கப்படும் துறையில் இருக்கும் தொழிலாள பெரும்பாலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் 1.6 பில்லியன் மக்கள், வருமானத்தை ஈட்டுவதில் பாரிய சேதத்தை சந்திக்க வரிசையில் நிற்கிறார்கள்” என்று ILO வின் பணிப்பாளர் நாயகம் கை ரைடர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் 3.3 பில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமானோர் முறைசாரா பொருளாதாரத்தில் நம்பியுள்ளவர்கள்.- அடிப்படை பாதுகாப்புகள் இல்லாததால், வீட்டிலிருந்து வேலை செய்ய வாய்ப்பில்லை அத்துடன் முடக்கப்பட்ட காலப்பகுதியில் அவர்களுக்கு மாற்றீடு வருமானமும் இல்லை. “வீட்டிலேயே இருப்பது என்பது வேலையை இழப்பதாகும், ஊதியம் இல்லாமல் அவர்கள் சாப்பிட முடியாது” என்று ILO அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.