இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் 3 பேர் உயிரிழந்தனர்.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரர் இன்று உயிரிழந்தார்.
ஜா-எல பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
அவர் ராமக வைத்தியசாலையில் இருந்து நேற்று முன்தினம் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தநிலையில்இ இன்று உயிரிழந்ததாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.
அவர் விசேட தேவை உடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஒருவரும் இன்று உயிரிழந்தார்.
இறுதியாக உயிரிழந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவாண் பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் 19ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 காரணமாக நாளொன்றில் அதிகமான உயிரிழப்புகள் இலங்கையில் பதிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.