நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.

இந்த நிகழ்வு இன்று முற்பகல் களனி ரஜமகா விகாரையில் இடம்பெற்றது

நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஐம்பது வருட அரசியல் வரலாற்றைக் கொண்டவர்.

1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், 1995ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சராக செயற்பட்டார்.

2004 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதன் முறையாக பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.

குருணாகல் மாவட்டத்தில் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 5 லட்சத்த 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

இது பொதுத் தேர்தலொன்றில் அபேட்சகர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்புவாக்குகள் என வரலாற்றில் பதிவானது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435