அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கொரிய மொழி வினைத் திறன் பரீட்சைக்கு விண்ணப்பித்த சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேறொரு தினத்தில் பரீட்சை நடத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

கொரிய வேலைவாய்ப்பை நாடி செல்லும் நோக்குடன் கொரிய மொழி தேர்ச்சிக்காக நடத்தப்படும் வினைத்திறன் பரீட்சை தற்போது நடைபெற்று வரும் நிலையிலேயே பணியகம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.slbfe.lk இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமையினால் வினைத்திறன் பரீட்சையில் தோற்றமுடியாமல் போனது என்பதை உறுதிப்படுத்த கிராமசேவகர் அல்லது சமாதான நீதவான் உறுதிபடுத்திய கடிதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

உறுதிப்படுத்தல் கடிதங்களின்றி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் கவனத்திற்கொள்ளப்படாது என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்களை இம்மாதம் 12ம் திகதிக்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 27ம் திகதி கொரிய மொழி வினைத்திறன் பரீட்சை ஆரம்பமானது. கணினியூடாக பரீட்சைகள் நடத்தப்படுகின்றமையினால் ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் வழங்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435