வௌிநாடுகளில் பணியாற்றும் 15 இலட்சம் இலங்கையருக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டும் வேலைசெய்யும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நேற்று (08) அலரி மாளிகைளில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது.
வௌிநாட்டில் வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகளின் எதிர்காலம், பாதுகாப்பு என்பவை தொடர்பில் உள்ள பொறுப்பை எப்போது அரசாங்கம் தட்டிக்கழிக்காது.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் அந்நிய செலாவணி அதிமுக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அவர்களுக்கு வழங்க வேண்டிய நன்மையை அரசாங்கம் வழங்கும். நீண்டகால இழுபறி நிலையில் இருந்த வௌிநாட்டில் பணியாற்றுவோரின் ஓய்வூதிய பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.