
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாபாடு நாடுகள் மிக விரைவாக தளர்த்துவது நோய்த் தொற்றுக்களில் கொடிய எழுச்சியை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் இடம்பெற்ற செய்திளார் மாநாட்டில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரொஸ் எதனம் கெப்றியேஸஸ் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார தாக்கத்துடன் போராடும்போது, கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான உத்திகளை உருவாக்க உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.
ஆனால் இது மிக விரைவாக செய்யப்படக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகளை மிக விரைவாக தளர்த்துவது ஒரு கொடிய எழுச்சிக்கு வழிவகுக்கும்.
எனவே, சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால், செல்லும் வழி ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.