கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறுகை பகுதி இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவர் 3 பேரை விருந்தினர் பகுதிக்கு அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விமான நிலையமற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பேணுதல் உட்பட சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களை விமான பயணிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துள்ளப்பட்டுள்ளது.