இம்மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் நடத்தப்பட்ட கொரிய மொழி விருத்தி மதிப்பீட்டு முறையிலான முதலாவது பரீட்சையில் தோற்றியவர்களது பெறுபேறுகள் 12ஆம் திகதி வெளியிடப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். 80 வீதமானவர்கள் தோற்றினர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் வெளியான பின்னர் திறமைக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எழுத்து, தகுதி மற்றும் திறமை ஆகிய மூன்று பிரிவுகளும் உள்ளடக்கப்பட்ட வகையில் நடத்தப்பட்ட இப்பரீட்சையில் தோற்றுவதற்கு 22353 பேர் விண்ணப்பித்திருந்தனர். 20187 பேர் பரீட்சையில் தோற்றினர். 2165 பேர் பரீட்சைக்கு சமூகமளிக்கவில்லை.
இதேவேளை, தென் கொரியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவது தொடர்பில் இலங்கையர் தலையிட முடியாது என்றும் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக பண மோசடி செய்வோரிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் பணியகம் விண்ணப்பதாரிகளிடம் கோரியுள்ளது.
வேலைத்தளம்