புகலிடக்கோரிக்கையாளர் கொள்கையில் மாற்றமில்லை- அவுஸ். அரசாங்கம்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையில் எவ்வித மாற்றமும் செயயப்படபோவதில்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் இலங்கையில் இயங்கி வருகின்றனர் என்ற சந்தேகம் நிலவுவதால் கொள்கையில் மாற்றமில்லையென அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.

படகினூடாக அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை சுமார் 9.6 பில்லியன் டொலர்கள் வரை செலவழித்துள்ளது. மேலும் எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் சட்டவிரோத ஆட்கடத்தை தடுப்பதற்காக அவுஸ்திரேலியா 5.7 பில்லியன் டொலரை செலவிடவுள்ளதாக யுனிசெப் மற்றும் சேவ் த சில்ரன் ஆகிய சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் சட்டவிரோத ஆட்கத்தல்காரர்கள் இன்னும் இயங்கி வருவதால், புகலிடக்கோரிக்கையாளர்கள் கோரிக்கை தொடர்பான கொள்கைகளில் எவ்வித தளர்வும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முற்படுவோர் நவுறு, மற்றும் மனுஷ் ஆகிய தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பராமரிப்புக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் பெருந்தொகையான பணத்தை செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்/ தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435