புலம்பெயர் நலனுக்காக அரச எவ்வளவு நிதியொதுக்கியுள்ளது?- ஜேவிபி கேள்வி

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக அரசாங்கம் எவ்வளவு நிதியை ஒதுக்கியுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னனி அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்ட மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எத்தர அபி அமைப்பின் அழைப்பாளருமான ஹந்துன்னெத்தி இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு மானியங்கள் மற்றும் கடன்களாக அரசாங்கத்திற்கு பெரும் தொகை கிடைத்துள்ளது. இது தவிர புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக அரசாங்கம் நிதியைப் பராமரித்து வந்தது. “அவர்களின் பொருட்டு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய நாங்கள் கோருகிறோம், பாராளுமன்றம் கூடவில்லை, அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூற எங்களுக்கு எந்த மன்றமும் இல்லை, ஆனால் அது எங்களுக்கு ஒரு பதிலைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”

“புலம்பெயர் தொழிலாளர்களினால் எமது நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியானது எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.. 2018 ஆம் ஆண்டில், நாடு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களினால் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 7.9% ஆகும். புலம்பெயர்ந்து பணியாற்றுவோர் சிங்களத்தில் ரட்ட விருவோ என்று அரசாங்கம் அடையாளம் காட்டியது, அதாவது வெளிநாட்டு மாவீரர்கள் அல்லது இன்னும் அர்த்தமுள்ள வெளிநாட்டு ஊழியர் மாவீரர்கள் என்று அரசாங்கம் அவர்களை தெரிவிக்கிறது. இப்போது, ​​அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? நாட்டில் மக்களைக் கவனிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் குறித்தும் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டிருக்கிறது வெளிநாட்டில் வசிக்கும் எந்தவொரு இலங்கையரும், அந்நாடுகளில் பாதுகாப்பு இல்லை என்று நினைத்தால் நாடு திரும்ப அவர்களுக்கு உரிமை உண்டு அவர் அல்லது அவள் நினைத்தால் நாடு திரும்புவதற்கு உரிமை உண்டு. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் விசாக்கள் காலாவதியாகிவிட்டால், வீடு திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

“சில மத்திய கிழக்கு நாடுகள் கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன, குவைத், கட்டார், சவுதி அரேபியா, அபுதாபி மற்றும் டுபாய் போன்ற நாடுகளில் குடியேறிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாலைத்தீவில் உள்ள தீவுகளில் பல இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அத்தீவுகளில் பணியாற்றியவர்கள் தற்போது மாலே நகருக்கு வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதனால் அங்கு சன நெருக்கடி அதிகமாகியுள்ளது. ப சதுர கி.மீ. பரப்பில் சுமார் 23,000 பேர் உள்ளனர். பல இலங்கையர்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடைந்து வருகிறது. உணவுப் பற்றாக்குறையும் உள்ளது. மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை அவசரமாக அழைத்து வருவதற்கு ஒரு விமானத்தை வழங்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கோருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435