வௌிநாட்டு பணியாளர்களை பதிவுசெய்தல் 20 முதல் ஆரம்பம்: நாடுகளின் விபரம் இதோ

வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.

அனைத்து மாகாண மற்றும் மாவட்ட செயலகங்களில் பதிவுசெய்துகொள்ள முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கான பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் தொழில்புரிவதற்கு செல்வோரை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 13 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம் : Newsfirst.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435