பயிற்சியின்றி வௌிநாடு செல்ல அனுமதியோம்!

பயிற்சி பெறாத எவரும் இனிமேல் வௌிநாட்டில் தொழில் நாடி செல்ல அனுமதியோம் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நேற்று (20) காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ரிஸானா நபீகிற்கு இடம்பெற்ற அநீதி இனிமேல் எந்தவொரு இலங்கை பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்று ஆணித்தரமாக தெரிவித்தார்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது 636 தமிழ்,முஸ்லிம்,சிங்கள பிள்ளைகளுக்கு ஒரு கோடிக்கு மேல் புலமைப்பரிசில் நிதியாகவும் பரிசில்களாகவும் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணாம லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டில் தொழில்புரியும் புலம் பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளில் தரம் 5 புலமைப்பரிசில்பரீட்சையில் சித்தியடைந்த 207 பிள்ளைகளுக்கு 15000.00 ரூபா வீதமும் ,கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த 376 பிள்ளைகளுக்கு 20000.00 ரூபா வீதமும் ,கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 53 பிள்ளைகளுக்கு 30000.00 ரூபா வீதமுமாக மொத்தம் 12215000.00 1கோடி இருபத்திரெண்டு இலட்சத்து பதினையாயிரம் ரூபாய் புலமைப்பரிசில் நிதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435