மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மருத்துவ பீட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று (03) எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரச மருத்துவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று நன்பகல் 12.00 மணிக்கு நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரச மருத்துவர்கள் சங்க செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் அனைத்து மருத்துவ பீட மாணவர்களும் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்ற போதும் அது தொடர்பில் உணர்வுபூர்வமாக பார்க்கத் தவறிய அரசாங்க அதிகாரிகள் தனியார் கல்லூரி மாணவர்கள் தொடர்பில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர் என்று டொக்டர் நலிந்த ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.
மருத்துவப்பீட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் மருத்துவர்கள் சங்கம் மாலாபே தனியார் மருத்துவக்கல்லூரியை அரசு பொறுப்பெடுத்து அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்