கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்ட பரீட்சையை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் ஒருவாரத்திற்குள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (28) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இவ்வாறு குறிப்பிடார்.
மூலம் : News.lk