அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகியதாக கூறி தகுதியற்றவர்கள் கல்விச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை அனுப்ப அகில இலங்கை ஆசிரியர் கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இம்முறைப்பாட்டு கடிதத்திற்கு கையொப்பம் பெரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது என்று அத்தொழிற்சங்க செயலாளர் தமன சுகததம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகினார்கள் என்று கூறி கல்வித் சேவையில் இணைத்துக்கொள்ளபட்டமை இதுவே முதற்தடவையாகும். வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு தகுதியற்றவர்கள் ஆசிரியர் கல்விச் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து ஆசிரியர் மத்திய நிலையங்களினதும் விரிவுரையாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் என்றும் சுகததம்ம தேரர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்