இலங்கையில் நாளொன்றுக்கு 658 கருக்கலைப்புக்கள்

இலங்கையில் நாளொன்றுக்கு 658 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வருடாந்தம் 2,40,170 கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன.

தாய்க்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய நிலைகளில் கருக்கலைப்பு செய்வது இலங்கையில் சட்டவிரோதமாகும். பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக அநேகமான தாய் மரணம் இடம்பெறுவதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டினர்.

2014 ஆம் ஆண்டு இலங்கையில் 112 தாய் மரணங்கள் சம்பவித்துள்ளன. 112 மரணங்களில் 14 மரணங்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்புக்களே காரணமாக அமைந்துள்ளன.

இலங்கையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவோர் மத்தியிலேயே அதிகளவில் கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் பதின்ம வயதினரிடையே 6.5 வீத கருக்கலைப்பும் திருமணமான பெண்களிடையே 49.5 வீத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி ஊவா மாகாணத்திலேயே அதிக கருகலைப்புகள் இடம்பெற்ற்றுள்ளன. இது நூற்றுக்கு 7.33 சதவீதமாகும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435