உலக தொழிலாளர் மாநாடு 2016 பற்றிய விசேட மாநாடு

ஜெனீவா உலக தொழிலாளர் மாநாட்டில் தொழிலாளர் பிரதிநிதியின் கடமைப் பொறுப்பக்கள் எவை என்பது தொடர்பிலான திறந்த மாநாடொன்று நாளைமறுதினம் (15) காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கொழும்பு சிட்டி ஹொட்டேலில் (Colombo City Hotel ) நடைபெறவுள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரையில் ஜெனீவாவில் அமைந்துள்ள உலக தொழிலாளர் அமைப்பின் மாநாடானது உலக தொழிலாளர் சட்டசபைக்கு சமனானது. இந்த மாநாட்டில் யார் கலந்துகொள்ள வேண்டும்? எதை பற்றி கலந்துரையாட வேண்டும்? இதில் என்ன உள்ளடக்கப்பட வேண்டும். தொழிலாளர் தரப்பின் அபிலாஷைகளை இச்செயற்பாட்டினுள்ளே பிரதிநிதித்துவப்படுத்துவது? போன்ற விடயங்கள் தொடர்பில் எமது நாட்டில் பரந்த அறிவு மக்களிடையே ஏற்படுத்தப்படவில்லை.

எனவே இந்த இவ்விடயம் தொடர்பில் தொழிலாளர்கள் மத்தியில் கலந்துரையாடும் நிலைக்கு கொண்டுவரப்படுவதன் அவசியம் தற்போது காணப்படுகறது. தொழிலாளர் தரப்பினரின் குரல் இந்த தீர்மானமெடுக்கக்கூடிய முக்கியமான உலக தொழிலாளர் மாநாட்டில் ஒலிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின் ஏற்பாட்டாளரான சதுர சமரதுங்க மற்றும் நிலந்தி ரணசிங்க ஆகியோராவர். சுயாதீன தொழிற்சங்க செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளமையினால் வருகையை 071 8258898 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது (ஹரிப்பிரிய) [email protected] மின்னஞ்சல் முகவரியினூடாகவோ தொடர்பு கொண்டு வருகையை உறுதிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435