இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்ளுடைய விடுமுறை அங்கீகரிக்கப்படவுள்ளதாகவும் மூன்று மாத சம்பளத்தை கடனடிப்படையில் வழங்கவுள்ளதாகவும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தால் பாரிய மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது இதனால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அன்றாட செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் அடுத்து என்ன செய்வது என்பதறியாமல் தவித்துப் போயுள்ளனர்.
இந்நிலையை கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சலுகைகளையும் நிதி உதவியையும் வழங்க வேண்டிய கடப்பாடு தற்போது காணப்படுகிறது. எனவே அவர்களுடைய விடுமுறையை அங்கீகரிப்பதுடன் மூன்று மாத சம்பளத்தை கடனடிப்படையில் வழங்கவும் அமைச்சு தீர்மானித்துள்ளது என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைத்தளம்