தனியார்துறை ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் 30 வீதத்தை பெற்றுக் கொடுப்பதில் இருந்த பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த 30ஆம் திகதி அமைச்சில் நடைபெற்ற திட்ட முன்னேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நிதியை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் நிதியை வழங்கும் நிலை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதவரையில் 30 வீத நிதியை பெற்றுக்கொள்வதற்கு 82,771 விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் தகுதி பெற்ற 75,905 பேருக்கு அவசியமாக விண்ணப்பங்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை ஊழியர் சேம லாப நிதியத்தின் 17 பில்லியன் நிதி 30 வீத நிதியை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்