அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது ஏற்கனவே தலைவராக இருந்த விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக பாதெனிய தெரிவு செய்யப்படும் ஆறாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஏனைய உறுப்பினர்களும் இப்பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர். சங்கத்தின் புதிய செயலாளராக டொக்டர் நவீன் டி சொய்சாவும் மாத இதழ் ஆசிரியராக டொக்டர் நலிந்த ஹேரத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலைத்தளம்