தோட்டத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்க

பிரதமருக்கு கடிதம்

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இராமநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இம்மாத இறுதியில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக அண்மையில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது உறுதியளிக்கப்பட்டது. எனினும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கான திகதி இன்று வரையில் எமக்கு அறிவிக்கப்படவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இப்பிரச்சினை தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் தொழிற்சங்கங்கள் நேரடியாக தோட்டக் கம்பனிகளுடனும் தொழில் அமைச்சினூடாகவும் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பை செய்யும் விடயத்தில் என்றுமில்லாதவாறு தோட்டக்கம்பனிகள் பிடிவாதமாக இருக்கின்றமை அறிந்த விடயமே.

சம்பள உயர்வின்றி தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு வகையான பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர் என்பது நீங்கள் அறிந்த விடயம்தான். இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்காமையினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் அதிருப்தியுடன் விரக்தி நிலையில் உள்ளனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் நகல் தொழில் தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, முதலாளிமார் சம்மேளன செயலாளர் நாயகம், இ.தொ.கா. மற்றும் இ.தே.தோ.தொ.சங்க பொதுச் செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435