பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளருக்கு இதுவரை 6.6 மில்லியன் ரூபா நட்டஈடு

வெளிநாடுகளில் பணிபுரியும் போது பல்வேறு சுரண்டல்களுக்குள்ளான மற்றும் விபத்துக்களானவர்களுக்காக இதுவரை 6.6 மில்லியன் ரூபாவை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கியுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் தலத்தா அத்துகோரள நேற்று  முன்தினம் (14) தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதிப்புக்குள்ளான 37 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு அமைச்சர் தலைமையில் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டில் முதல் இரு காலாண்டுகளில் மட்டும் பாதிக்கப்பட்ட 76 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 11,140,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கு வெளிநாடுகளில் தொழிலுக்காக செல்பவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மத்திய வருமானமுடைய நாடாகிய இலங்கையில் மனித கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. நாம் வெளிநாட்டு கடன்களில் தங்க வேண்டி கட்டாயத்தில் உள்ள நாடு என்ற வகையில், இந்த நிலையில் இருந்து வெளியே பொறுப்பாக செயற்பட வேண்டும்.

ஓமான் அரசிடம் நான் விடுத்த வேண்டுகோளையடுத்து சுற்றுலா வீசாவில் செல்வோருக்கு தொழில் செய்யும் வாய்ப்பை இனி வழங்கப்போவதில்லை என்று ஓமான் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களினால் பெறப்படும் அந்நிய செலாவணியினூடாகவே எமது நாடு அதிக வருமானத்தை பெற்று வருகிறது. எனவே அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை.

வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் முதலீடு செய்வது என்பது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வுகளை தொழிலாளர்களுக்கு நடத்த நாம் திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435