யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் யாழ் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) காலை 11.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ் மாவட்ட கடற்பரப்பில் வெளி மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு மாவட்டச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிமாவட்ட மீனவர் யாழ்.மாவட்டக் கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் தடை செய்யப்பட்ட தொழிலில் ஈடுபடுவதால் குடாநாட்டு மீனவர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன் கடல் வளமும் அழிந்து போகின்றது. இதனால் எதிர்கால சந்ததியினர் வருமானமின்றிப் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டியேற்படும். இந்த அவலநிலை குறித்து அரசாங்க அதிபரின் கவனத்திற்குத் தெரியப்படுத்திய மீனவர், தங்கள் வாழ்வாதாரத்திற்குக் கை கொடுத்து உதவுமாறும் கோரியிருந்தனர்.
இதையடுத்து இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வந்துள்ள அரசாங்க அதிபர் இன்று காலை செயலக மண்டபத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைத்துள்ளார்.
வேலைத்தளம்