எட்கா ஒப்பந்தத்தை தவிர்க்க போராடுவோம்- கே.டி. லால்காந்த

இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) இலங்கைக்கு எந்தவகையிலும் சாதகமற்றது என்று என்றவகையில் அதனை தவிர்க்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க தயாராகவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்தியநிலையத்தின் தலைவர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.

இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் பல இலங்கையர் தொழில்வாய்ப்பை இழப்பதுடன் பெறும் சம்பளத்தில் வீழ்ச்சியும் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக கடந்த வாரம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எட்கா ஒப்பந்தத்திற்கு எதிராக ஒரு மில்லியன் கைப்பிரதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

எட்கா ஒப்பந்தத்தின் ஊடாக அரசாங்கம் இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளனதால் முதலீட்டாளர்கள் வழங்கும் சம்பளமும் குறைவாகவே இருக்கும். இதனால் அரசாங்கம் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற இந்தியாவிலிருந்து வேலையாட்களை அழைத்து வர முயற்சி செய்யும். இதனால் இலங்கையில் உள்ளவர்களுக்கு தொழில் பாதுகாப்பின்மை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. சிவில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் நிலையை எடுத்து விளக்கிய போதிலும் அரசாங்கம் நேர்மையற்ற முறையில் நடக்க முயற்சிக்கிறது. எது எவ்வாறிருப்பினும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் கவனமாயிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய மின்சாரசபை ஊழியர்கள் சங்கம், இலங்கை ரயில் திணைக்கள பொது ஊழியர்கள் சங்கம், அகில இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம், தொழிலற்ற பட்டதாரிகள் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435