தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலையின் சாம்பல் தீவு மற்றும் கிளிநொச்சியின் இரணிவி ஆகிய கடற்பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.
சாம்பல் தீவு பிரதேசத்தில் 10 மீனவர்களும் இரணிவி பிரதேசத்தில் 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடமும் கிளிநொச்சி மீனவ விசாரணை காரியாலயத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
வேலைத்தளம்