தனியார் பட்டதாரிகள் ஆசிரியர் ​சேவைக்கு வேண்டாம்!

தனியார் உயர்கல்வி நிலையங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

உயர்தரத்தில் தோற்றி பல்கலைக்கழக வாய்ப்பை இழந்து தனியார் நிறுவனங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் இவ்வாறு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுடைய பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கு தேவையான பணம் கடனாக வழங்கப்படுகிறது. ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படின் அக்கடன் முழுமையாக கழிக்கவும் இல்லையெனில் அறவிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஆசிரியர் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்தர விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய துறைகளில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு இம்முறை பயன்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் இம்முறையினால் இலவச கல்வி நாசம் செய்யப்பட்டு தனியார் உயர்கல்வி நிறுவனங்களை நிலைநிறுத்த முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435