புதிதாக ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை

வடமேல் மாகாணத்தின் பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் 1500 பட்டதாரிகள் வீதம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்று மாகாண கல்வி, கலாசார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தியா ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட செயலமர்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பட்டதாரிகளையும் டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் தொகுதியில் 31 பாடசாலைகளிலும் நிகவெரட்டிய தொகுதியில் 8 பாடசாலைகளிலும் ஆங்கில பாடத்துக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. நிகவெரட்டிய தொகுதிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் ஆனால் புத்தளம் தொகுதியில் கடினம். ஏனெனில் சில ஆசிரியர்கள் இடமாற்றத்தை தவிர்க்கப்பார்க்கின்றனர். இப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கல்வியியற் கல்லூரிகளிலிருந்த வௌியேறும் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் புத்தளம் தொகுதியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவுக்கு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கருவெலகஸ்வெவ, வண்ணாத்துவில்லு கோட்ட காரியாலய மட்டத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435