தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கல்வியியல் டிப்ளோமாவை பூர்த்தி செய்த 169 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.எ.நிஸாம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்படவுள்ள இவ்வாசிரியர்களில் சிங்கள மொழி மூலம் 100 பேரும் தமிழ் மொழி மூலம் 69 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 1064 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ள இவ்வாசிரியர்களின் கலாசாரம் மற்றும் சமய பண்புகளை நிறைவேற்றும் வகையில் அவரவர் சமூக பாடசாலைகளில் நியமனங்கள் வழங்குவது சிறந்தது என்று தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் மாகாண கல்வியமைச்சு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமையினால் அவை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணங்களில் கலாசாரத்திற்கு புறம்பான பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு நியமனம் வழங்கப்பட்டமை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்